யட்சி 14


Video Link Here

எனக்கு தம் அடிக்க வேண்டும் போல இருந்தது. அவர்கள் இறங்கி உள்ளே செல்லும் வரை நான் காரில் அமர்ந்திருந்தேன். பின்னர் அவர்கள் உள்ளே சென்றதும் காரை விட்டு இறங்கி ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்ற வைத்தேன்.

மனம் முழுவதும் யாமினி மீதே இருந்தது. அவள் விக்ரமை கல்யாணம் செய்து கொண்டால் எனது வாழ்வு என்னாவது? என்னால் அதனை எப்படி தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் பயங்கரமான யோசனைகளுடன் சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் யாமினி மட்டும் தனியாக காரை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவள் அருகில் வந்ததும்,

“என்ன யாமினி?”
என்றவாறு சிகரட்டை கீழே போட்டுவிட்டு காரின் அருகில் வந்தேன்.

“இல்ல. ஃபோன கார்லயே வச்சிட்டு போய்ட்டேன். அதான்.”

“ஹ்ம்ம். எடுத்துக்கோங்க.”
என்றவாறு காரை அன்லாக் செய்தேன்.

“நீங்க இங்க என்ன பண்றீங்க? உள்ள வரலையா?”
பின் சீட்டில் இருந்து போனை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபடி என்னிடம் கேட்டாள்.

“இல்ல. இங்கயே கொஞ்ச நேரம் உக்காந்து சாங்ஸ் கேக்கலாமேன்னு…”

“ஹ்ம்ம். சாங்ஸ் மட்டும் தானா? இல்லன்னா வேற ஏதும் கூட இருக்கா?”

“வேற ஏதும் னா?”

“நேத்து மாதிரி ஏதாவது?”

“ஐயோ! அதெல்லாம் இல்ல யாமினி. நேத்து கொஞ்சம் ஓவர் ஆய்டிச்சி. சாரி.”

“ஓவராகுற அளவுக்கு எதுக்கு குடிக்கணும்?”

“அவ்ளோ தூரம் வண்டி ஓட்டுன களைப்புல கொஞ்சம் ஓவர் ஆகிட்டு. சாரி.”

“ஓஹ். அது தான் ரீசனா?”

“மேய் bபீ”

“உண்மைய சொல்லுங்க கார்த்திக். நீங்க இன்னும் என்ன மறக்கலையா?”

“என்ன திடீர்னு இப்டி கேக்குறீங்க?”

“சொல்லுங்க.”

“அப்டி எதுவும் இல்ல யாமினி. அதெல்லாம் நா அப்பவே மறந்துட்டேன்.”

“இத நா எப்டி நம்புறது? எனக்கு நைட் பூரா இது தான் ஒரே யோசனையாவே இருந்துச்சி. என்ன லவ் பண்ணுன உங்க கண் முன்னாடியே என்னோட ஃபியான்ஸிய சந்திக்கிறதும் ஃபோன் பேசுறதுமா இருந்தா உங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் ன்னு எனக்கு அப்ப புரியல. நீங்க நைட் அந்த அளவுக்கு போதையாகி இருந்தப்ப தான் நா அத உணர்ந்தேன்.”

“இல்ல யாமினி. அதெல்லாம் எதுவும் இல்ல. நா டயர்ட்ல தான் குடிச்சேன். நீங்க அதெல்லாம் பத்தி யோசிச்சி மனச குழப்பிக்க வேணாம். ப்ளீஸ்.”

“நைட் பூரா என்னோட பேர சொல்லி உளறின்னு இருந்திருக்கீங்க. அப்புறம் எதுக்கு அதெல்லாம் எதுவும் இல்லன்னு பொய் சொல்றீங்க?”

“நா எப்ப உங்க பேர சொல்லி உளறுனேன்? கீர்த்தனா ஏதாச்சும் சொன்னாளா?”

“ஆமா. நீங்க நைட் பூரா போதைல என் பேர சொல்லி உளறிக்கிட்டு இருந்தீங்கன்னு சொன்னா. உங்களுக்குள்ள ஏதாச்சும் இருக்கான்னு வேற என்கிட்ட கேக்குறா.”
நான் நினைத்தது போலவே கீர்த்தனா தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தாள்.

“இல்ல யாமினி. அது வந்து… ஐ ஆம் சாரி.”

“நீங்க இன்னும் என்ன மறக்கல கார்த்திக். அது எனக்கு நல்லாவே புரியுது.”

“அது போதைல ஏதாச்சும் உளறி இருப்பேன். அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்.”

“போதைல தானே உண்மை எல்லாமே வெளிய வரும்!”

“அதெல்லாம் இல்ல யாமினி. அப்டி பாத்தா இன்னக்கி அம்மாகிட்ட பேசி உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சது நான் தானே.”

“நீங்க இங்க பண்ணது எல்லாமே உங்க மனச தாண்டின விஷயங்கள் கார்த்திக். இதனால உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லன்னு என்கிட்ட காட்டறதுக்காக நீங்க நடிச்சி இருக்கலாம். இல்லன்னா அது உங்க ஜெனுயினிடியா கூட இருக்கலாம். ஆனா, உங்க மனச கஷ்டப்படுத்தின்னு விக்ரம் கூட என்னால சந்தோசமா பேச கூட முடியல. ஒரே கில்ட்டியா இருக்கு.”

“எல்லாம் ஓகே யாமினி. நீங்க சொல்றது உண்மையா கூட இருந்துட்டு போகட்டும். ஆனா, நீங்க எதுக்கு என்ன பத்தி யோசிக்கிறீங்க? நீங்க உங்க மனசுல என்ன தோணுதோ அத மட்டும் பண்ணுங்க. அடுத்தவங்கள நீங்க பாக்கணும்ன்னு அவசியம் இல்லையே.”

“என்னால அப்டி இருக்க முடியல கார்த்திக். உங்கள பாத்தாலே எனக்கு ரொம்ப கஷ்டமா ஃபீல் ஆகுது. உங்க மனச ரொம்ப கஷ்டப்படுத்துறோமேன்னு தோணுது.”

“அதுக்காக இப்ப என்ன பண்ணலாம் ன்னு சொல்றீங்க யாமினி? எனக்கு புரியல. இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விஷயங்கள். நாம ‘ஸ்டாப் திங்கிங் அபௌட் ஹர்’ னு சொன்னதும் மனசு கேட்டிடுமா என்ன?”

“மனச நாம தான் கட்டுப்படுத்திக்கணும்.”

“நானும் அதுக்காகத் தான் இவ்ளோ ட்ரை பண்றேன். துபாய்ல இருந்தப்போ உங்கள மறந்து தான் இருந்தேன். ஆனா இங்க வந்து உங்கள பார்த்தப்போ…”
ஏதோ வாய் தவறி உளறிவிட்டதனைப் போல சற்று நிறுத்தினேன்.

“என்ன?”

“இல்ல. ஒண்ணுமில்ல.”

“பரவால்ல. சொல்லுங்க.”

“இல்ல. அத விடுங்க. நீங்க கெளம்புங்க.”

“ஐயோ. சொல்லுங்க கார்த்திக்.”

“இதுக்கு தான் நீங்க டூர் வர வேணாம் னு நா அந்த லூஸுகிட்ட சொன்னேன். அவ தான் கேக்கல. இப்ப பாருங்க. இதனால உங்களுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம்.”

“பேச்ச மாத்தாம விஷயத்த சொல்லுங்க. துபாய்ல இருந்து வந்து என்ன பாத்தப்போ என்னாச்சி?”

“கட்டாயம் சொல்லனுமா?”

“ஆமா.”

“சரி. சொல்றேன். ஆனா, என்ன தப்பா நெனைக்காதீங்க.”

“ஹ்ம்ம். சொல்லுங்க.”

“உங்கள முதல் முதல்ல பாத்தாப்போ சத்தியமா உங்க அழகுல நா மயங்கிட்டேன். உங்கள ஒரு நிமிஷம் கூட பாக்காம இருக்கவே முடியாம இருந்திச்சு. அப்புறம் போகப்போக அது லவ்வா மாறிடிச்சி. என்னால உங்கள விட்டு துபாய் போக முடியல. மனசு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அதனால தான் துபாய் போக முன்னால அட்லீஸ்ட் என்னோட லவ்வயாச்சும் உங்ககிட்ட சொல்லிட்டு போய்டலாம்ன்னு உங்ககிட்ட வந்தேன். லவ்வயும் சொன்னேன். ஆனா நீங்க என்ன தொல்ல பண்ணாம போங்க அது இதுன்னு அவமானப் படுத்துற மாதிரி பேசி அனுப்பிட்டீங்க. அது என்ன ரொம்பவே ஹர்ட் பண்ணிச்சு. அது கோவமா மாறி, ஈகோவா மாறி உங்ககூட பேசாமலே அந்த 5 வருஷமும் இருந்தேன். அப்டியே கொஞ்சம் கொஞ்சமா உங்கள மறந்துட்டேன்.”

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தாள். நான் தொடர்ந்தேன்.

“அப்புறம் அங்க இருந்து வந்து உங்கள பாத்த அடுத்த செக்கனே அந்தக் கோவம் ஈகோ எல்லாம் மறைஞ்சி போச்சி. முன்ன இருந்தத விட இன்னும் பல மடங்கு அழகா இருக்கீங்க. என்னால என்னோட மனச கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு தேவத மாதிரி அழகா இருக்கீங்க. யட்சி மாதிரி மனசுக்குள்ள புகுந்து என்ன ஆட்டிப் படைக்கிறீங்க.”

நான் அவளது அழகினைப் பற்றி புகழ்ந்து பேசப் பேச அவளது நடவடிக்கைகளில் சிறிய ஒரு மாற்றம். நான் பேசும் போது என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவளது கண்கள் குனிந்து தரையைப் பார்க்க ஆரம்பித்தன. அவளது பூவிதழ்கள் லேசாக அசைந்து பூத்துக் கொண்டன. வெட்கம் அவளது வதனத்தினை ஆட்கொள்ள,

“ப்ளீஸ் கார்த்திக். போதும். நா ஒண்டும் அவ்வளவு பெரிய அழகி இல்ல. நீங்க வேணா பாருங்க. உங்களுக்கு என்ன விட நல்ல ஒரு அழகான பொண்ணு கிடைப்பா.”

“ஹ்ம்ம். ஓகே யாமினி. அது கிடைக்கிற நேரம் கிடைக்கட்டும். நீங்க என்ன பத்தி கவல படாதீங்க. ப்ளீஸ். உங்க லைஃப பாருங்க.”

“ஹ்ம்ம்.”

“ஓகே. நீங்க கிளம்புங்க. நா அப்புறமா வரேன்.

“ஹ்ம்ம். அப்புறம்…… இன்னக்கி குடிக்காதீங்க. ப்ளீஸ்.”

“ஹ்ம்ம். ஓகே.”

“குடிச்சிட்டு வந்து ஏதாச்சும் உளறி அது வருண் காதுல கேட்டிச்சின்னா ஏதும் ப்ராப்ளம் ஆயிட போகுது. ப்ளீஸ்.”

“ஹ்ம்ம். பயப்பட வேணாம் யாமினி. குடிக்கமாட்டேன்.”

“ஹ்ம்ம். அப்புறம் ரொம்ப தேங்க்ஸ்.”

“எதுக்கு?”

“இன்னக்கி அந்த லீச் அட்டாக்ல இருந்து என்ன காப்பாத்துனதுக்கு.”

“இட்ஸ் ஓகே யாமினி.”

“ஹ்ம்ம். நா கிளம்புறேன்.”

“ஒன் மினிட்”

“என்ன?”

“விக்ரம உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம்.”

“ரொம்ப?”

“எதுக்கு கேக்குறீங்க?”

“ஜஸ்ட் டெல்.”

“அதெல்லாம் தெரியல. அப்பா அம்மா பாத்து வச்சிருக்காங்க. அவர புடிக்கலன்னா கூட நா அவர கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்.”

“ஏன் அப்டி?”

“ஏன் அப்டின்னா? அப்பா அம்மா நமக்கு கெட்டது பண்ணுவாங்களா என்ன?”

“அப்பா அம்மா கெட்டது பண்ண மாட்டாங்க. ஆனா அவங்களுக்கு விக்ரம் பத்தி என்ன தெரிய போகுது? எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறமா தான் தெரியவர போகுது.”

“நீங்க எத சொல்றீங்க?”

“நீங்க விக்ரம கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு பொறாமைல நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. அண்ட், விக்ரம் இல்லன்னா கூட உங்க அப்பா அம்மா உங்களுக்கு வேற ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க. இதுல நா அட்வான்டேஜ் எடுத்துக்குறேன்னு நினைக்காதீங்க.”

“ஹ்ம்ம். சொல்லுங்க.”

“ஜஸ்ட் உங்களுக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது அவரு ஓடி வந்து உங்கள காப்பாத்தல. இந்த மாதிரி ஒருத்தர் உங்க லைஃப் பார்ட்னரா வந்தா உங்க லைஃப் சந்தோசமா இருக்கும் ன்னு நெனைக்கிறீங்களா?”

அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்தேன்.

“தப்பா எதுவும் சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க. ஆனா, இது பத்தி கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. அழகு பணம் அந்தஸ்து ன்னு பாத்து கல்யாணம் பண்ணி எந்த யூஸும் இல்ல. நம்மள வச்சி நல்லா பாத்துக்கற மாதிரி ஒரு லைஃப் பார்ட்னர் தான் தேவ. அத புரிஞ்சிக்கோங்க.”

அவள் அமைதியாகவே இருந்தாள்.

“உங்களுக்கு ஓகே ன்னா ஓகே. ஆனா, ஓகே இல்லன்னு மனசுல பட்டா நடந்தத உங்க அப்பாகிட்ட சொல்லுங்க. அவரு யோசிச்சு ஏதாச்சும் பண்ணுவாறு.”

“ஹ்ம்ம். பாக்கலாம்.”

“அப்போ விக்ரம உங்களுக்கு பிடிக்கலயா?”

“வீட்ல பாத்தாங்க. ஓகே பண்ணாங்க. என்கிட்ட கேட்டாங்க. அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேன்னு சொன்னேன். அவ்ளோ தான்.”

“இது உங்க வாழ்க்க யாமினி. நீங்க தான் முடிவு பண்ணனும். இன்னும் சின்ன குழந்த மாதிரி அப்பா அம்மா ன்னு இருக்காதீங்க. உங்க மனசுக்கு எது பிடிச்சிருக்கோ அதையே பண்ணுங்க.”

“இங்க பாருங்க கார்த்திக். நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. எனக்கு எங்க அப்பா அம்மா சொல்ற பேச்ச மீறி எதுவும் செய்ய முடியாது. வேற எதுனா கூட பரவால்ல. ஆனா, கல்யாண விஷயத்துல அவங்க பேச்ச மீறவே மாட்டேன்.”

“ஏன்?”

“அது அப்டிதான்.”

“என்னாச்சி? என்கிட்ட சொல்ல கூடாதா?”

“சொல்லக் கூடாதுன்னு இல்ல. ஆனா, நாங்க எங்க ஊர விட்டு வந்து உங்க ஊர்ல வீடு வாங்கி செட்டில் ஆனதுக்கு காரணம் ஒண்ணு இருக்கு. அதனால தான் இந்த விஷயத்துல அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்குறேன்.

“என்ன காரணம்?”

“எனக்கு ரொம்ப குளிருது. நா ரூமுக்கு கிளம்புறேன். அப்புறமா நேரம் கெடச்சா சொல்றேன்.”

“உங்க லைஃப் ல ஏதோ நடந்திருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அது என்னன்னு தெரியலன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும் யாமினி. ப்ளீஸ். உங்களுக்கு குளிரா இருந்தா கார்ல ஏறிக்கோங்க. நா கார் ஸ்டார்ட் பண்ணி ஹீட்டர் ஆன் பண்றேன்.”

அவள் சற்று யோசித்து விட்டு காரில் பின் சீட்டில் ஏறிக்கொள்ள, நான் முன் சீட்டில் ஏறி காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டரை ஆன் செய்தேன். பின்னர் அவள் பக்கமாகத் திரும்பி,

“இப்ப சொல்லுங்க யாமினி. அப்பா அம்மா சொல்றவங்களத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்ற அளவுக்கு உங்க லைஃப்ல அப்டி என்ன தான் நடந்திச்சு?” என்று கேட்டேன்.

“அது வந்து…”

தொடரும்…

Mail and Gchat:
[email protected]

6703060cookie-checkயட்சி 14